×

தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களில் தீவிர சோதனை

 

மண்டபம்,மார்ச் 20: ராமேஸ்வரம் பகுதிக்கு வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதிகளை தேர்தல் தலைமை அதிகாரிகள் அறிவித்ததை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களில் ரூபாய், ரொக்க தொகைகள் மற்றும் மொத்த பொருட்கள் கொண்டு செல்வதை தடை விதிக்கும் வகையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும்படையினர் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட மெய்யம்புளி என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வெளி மாநிலங்களில் இருந்து ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு வந்த அனைத்து வாகனங்களையும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் வாகனத்தில் வைத்திருந்த பைகள் மற்றும் பேக்குகள் உள்பட வாகனங்களை முழுவதும் அதிகாரிகள் சோதனையிட்டனர். பின்னர் வாகன ஓட்டுனரிடம் முழு முகவரியும் பெற்றுக்கொண்டு வாகனத்தில் வருகை தந்தவர்களையும் விசாரணை நடத்தினர்.

 

The post தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களில் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Mandapam ,Rameswaram ,Rameswaram National Highway ,Tamil Nadu ,
× RELATED தேங்கி கிடக்கும் பாலித்தீன் குப்பைகள் அழகை இழந்து வரும் அரியமான் கடற்கரை