×

திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்

 

திருப்பரங்குன்றம், மார்ச் 20: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியானது திருப்பரங்குன்றம், மதுரை மேற்கு, மதுரை தெற்கு ஆகிய மூன்று தாலுகாக்களை உள்ளடக்கியது. இதில் மொத்தமுள்ள 3,23,160 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை கண்காணிப்பது, தடுப்பது உள்ளிட்டவை குறித்து திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உதவி ஆணையர் குருசாமி, தாசில்தார்கள் அனிஷ் சத்தார், சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை தொகுதிக்கு உட்பட்ட 297 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மாற்றுத்திறனாளி மற்றும் 85 வயதுக்கு மேற்பட்டோரை கண்டறியும் பணிகளுக்கான 12 டி படிவம் வழங்கப்பட்டது. இதே போல் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு இயந்திரம் பயன்படுத்துவது குறித்து விளக்கப்பட்டது.

The post திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram taluk ,Tiruparangunram ,Virudhunagar ,Madurai West ,Madurai South.… ,Dinakaran ,
× RELATED வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தவர் கைது