×

மேம்பால பணியின்போது தார் பேரலில் தீ

 

கோவை, மார்ச் 20: கோவை உக்கடம் கரும்புக்கடை பகுதியில் 260 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. மேம்பாலத்தின் உள் பகுதியில் வண்ணம் பூசும் பணியும், பாலத்திற்கு இடையே உள்ள சப்வே ரோடு புதுப்பிக்கும் பணியும் நடக்கிறது. நேற்று மதியம் ரோட்டின் இணைப்பு பகுதியில் ஒப்பந்த நிறுவனத்தினர் தார் தளம் அமைக்க தார் பேரல் அடியில் தீ வைத்தனர். அப்போது தீ பேரல் முழுவதும் பரவியது.

இதை அணைக்க முடியவில்லை. அந்த பகுதி முழுவதும் தீ கரும் புகையுடன் பரவியது. ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகள் மூச்சு திணறலில் தவித்தனர். தீயை பக்கெட்டில் இருந்த தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சிறிது நேரம் போராடிய ஊழியர்கள் அப்படியே விட்டுவிட்டனர். இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

பணியின்போது அலட்சியமாக செயல்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணிகளை நெடுஞ்சாலைத்துறை தரக்கட்டுப்பாட்டு பிரிவினர் ஆய்வு செய்வார்கள். ரோட்டின் தரம் உறுதி செய்யப்படும். தரமின்றி காணப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பணியின்போது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் ஒப்பந்த நிறுவனம் செயல்பட கூடாது என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

The post மேம்பால பணியின்போது தார் பேரலில் தீ appeared first on Dinakaran.

Tags : barrel ,Coimbatore ,Ukkadam ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்