×

மன்னார்குடியில் ரங்கோலி கோலமிட்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் விழிப்புணர்வு பிரசாரம்

 

மன்னார்குடி, மார்ச் 20: நூறு சதவீதம் ஒட்டு போட வலியுறுத்தி மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் மன்னார்குடியில் ரங்கோலி கோலமிட்டு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தலில் 100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டும், 18 வயது நிறை வடைந்த எல்லோரும், ஓட்டு போட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் திட்ட இயக்குனர் பாலமுருகன் அறிவுறுத்தலின் பேரில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்கள் மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரங் கோலி கோலமிட்டு விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கீர்த்தனா மணி, வாக்காளர் பதிவு அலுவலர் மகேஷ் குமார், உதவி திட்ட அலுவலர் செந்தில்குமார், மகளிர் திட்ட வட்டார மேலாளர் மாலா ஆகியோர் பார்வையிட்டு தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களை பாராட்டினர்.

 

The post மன்னார்குடியில் ரங்கோலி கோலமிட்டு மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Rangoli Kolamittu ,Women's Self Help Group ,Mannargudi ,help ,Lok Sabha elections ,
× RELATED ஒரே நாளில் 89 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை