×

திண்டுக்கல் அருகே தமிழ்ப் பல்கலை மாணவர்களால் மரத்தாலான தூண் கண்டுபிடிப்பு

 

தஞ்சாவூர்,மார்ச்20: தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறையில் முதுகலைத் தொல்லியல் மாணவர்கள் கடந்த 14ம் தேதி திண்டுக்கல், கசவனம்பட்டி அருகே உள்ள கோனூரில் கள ஆய்வு செய்தனர். துறை மாணவி மௌனிகா அடையாளப்படுத்திய நடுகற்களையும் மரத்தாலான நினைவுத் தூணையும் துறையின் தலைவர் முனைவர் செல்வகுமார், கௌரவ உதவிப்பேராசிரியர் கௌரிசங்கர் ஆய்வு செய்தனர். அங்கு இருந்த ஓர் அரிய மரத்தாலான நினைவுத் தூணைப் பார்வையிட்டனர். சுமார் 300 ஆண்டுகள் பழமையான இம் மர நினைவுத்தூண் ஒரு வீரனின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம். இது தொடர்பான தெளிவான தகவல் தெரியவில்லை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்

The post திண்டுக்கல் அருகே தமிழ்ப் பல்கலை மாணவர்களால் மரத்தாலான தூண் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil University ,Dindigul ,Thanjavur ,Department of Maritime History and Maritime Archeology of Tamil University ,Konur ,Kasavanampatti, Dindigul ,Mounika ,Dinakaran ,
× RELATED வரத்து அதிகரிப்பு தஞ்சாவூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை குறைவு