×

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆரம்பாக்கம் கிராம பெண்கள், கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் தாலுகா, செரப்பனஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஆரம்பாக்கம் கிராமத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடை திறந்தன் காரணமாக மது அருந்தும் குடிமகன்களால் கிராம பெண்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது.

இதனால், உடனடியாக டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து, கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு டாஸ்மாக் கடையை அகற்றாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க போகிறோம் என போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள், கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அரசு டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனர். அதன்பேரில், ஆரம்பாக்கம் கிராம பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்: காஞ்சிபுரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Pandemonium ,Kanchipuram ,Arambakkam ,Serappananchery panchayat ,Kunradthur taluk ,Kanchipuram district ,
× RELATED 3 நாட்களுக்கு பிறகு திறப்பு டாஸ்மாக் மதுக்கடைகளில் குவிந்த மதுபிரியர்கள்