×

₹58 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

 

நாமக்கல், மார்ச் 20: நாமக்கல் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ₹58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடந்தது. இதில், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், மொத்தம் 2450 மூட்டை பருத்தியை கொண்டு வந்து குவித்தனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள், விவசாயிகள் முன்னிலையில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் ஆர்சிஎச் ரகம் ஒரு குவிண்டால் ₹8001 வரையும், டிசிஎச் ரகம் குவிண்டால் ₹8600 வரையும், மட்ட ரகம் ₹7009 வரையும் ஏலம் போனது. ஆகமொத்தம் ₹58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

The post ₹58 லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Agricultural Cooperative Society ,Namakkal Agricultural Producers Cooperative Marketing Society ,Trichy ,Dinakaran ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...