×

பாக்கு அறுவடை பணியில் விவசாயிகள் ஆர்வம்

 

அரூர், மார்ச் 20: தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகே வள்ளிமதுரை அணைக்கட்டு பகுதியிலும், பாப்பிரெட்டிப்பட்டி, வாணியாறு அணை கட்டு தென்கரைகோட்டை, ராமியம்பட்டி, ஜம்மனஹள்ளி, கர்த்தானூர், பறையப்பட்டி, மெணசி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பாக்கு பயரிடப்பட்டுள்ளது. தண்ணீர் அதிகம் தேவை என்பதால், தண்ணீர் வசதியுள்ள இடங்களில் பாக்கு பயிரிடப்படுகிறது. அதிலும் கடந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளதால் தற்போது ஏராளமானோர் பாக்கு பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடக்க கால செலவுகள் அதிகம் எனினும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஒரளவிற்கு நல்ல வருமானம் வருவதும், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததும், பாக்கு பயிரிடும் அளவு அதிகரிக்க காரணமாகிறது. கடந்த ஒரு மாதமாகவே அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பாக்கு அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு விளைச்சலும் நன்றாக இருப்பதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.

The post பாக்கு அறுவடை பணியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Aroor ,Dharmapuri district ,Vallimadurai dam ,papriprettipatti ,Vaniyaru dam ,Tenkaraikottai ,Ramiyampatti ,Jammanahalli ,Karthanur ,Paraiyapatti ,Menasi ,
× RELATED விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை குறைவு