×

பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி ஒன்றிய இணையமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேச்சு: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

சென்னை: பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களை தொடர்பு படுத்தி பேசிய பா.ஜ இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தியுள்ள ஒன்றிய பா.ஜ. இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பேசுவதற்கு அவர் ஒன்று, என்.ஐ.ஏ அதிகாரியாக இருக்க வேண்டும் அல்லது இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்வுடன் நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும்.

கண்டிப்பாக இப்படி பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. தமிழர்களோடு கன்னடர்களும் பாஜவின் இந்த பிளவுவாதப் பேச்சை நிராகரிப்பார்கள். நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறேன். பிரதமரில் இருந்து தொண்டர்கள் வரை பா.ஜவில் இருக்கும் அனைவரும் இத்தகைய அசிங்கமான, பிரிவினை அரசியலை உடனே நிறுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து அவர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

The post பெங்களூரு குண்டு வெடிப்பில் தமிழர்களை தொடர்புபடுத்தி ஒன்றிய இணையமைச்சர் பொறுப்பற்ற முறையில் பேச்சு: மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Tamils ,Bengaluru ,M.K. Stalin ,Chennai ,Chief Minister ,M.K.Stalin ,BJP ,Shoba Karandlaje ,DMK ,Tamil Nadu ,M.K.Stal ,Bengaluru Rameswaram ,
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...