×

வாபஸ் பெற்ற காங். வேட்பாளர்

அகமதாபாத்: காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரோகன் குப்தா. இவரது பெயர் கடந்த 12ம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்ட மக்களவை தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்று இருந்தது. குஜராத் மாநிலம், அகமதாபாத் கிழக்கு மக்களவை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ரோகன் குப்தா அறிவிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று ரோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து ரோகன் குப்தா தனது டிவிட்டர் பதிவில், ‘‘எனது தந்தை உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அகமதாபாத் கிழக்கு மக்களவை தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக நான் வாபஸ் பெறுகிறேன். கட்சியால் பரிந்துரைக்கப்படும் புதிய வேட்பாளருக்கு எனது முழு ஆதரவையும் வழங்குவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post வாபஸ் பெற்ற காங். வேட்பாளர் appeared first on Dinakaran.

Tags : AHMEDABAD ,Congress ,Rohan Gupta ,Lok ,Sabha ,Congress party ,Ahmedabad East Lok Sabha ,Gujarat ,Dinakaran ,
× RELATED மீண்டும் பாஜ ஆட்சிக்கு வந்தால் 2024...