- காது கேளாதோர் கிரிக்கெட் மகளிர் பிரிவு எம்.பி
- சென்னை
- மத்தியப் பிரதேசம்
- Def Enable Foundation
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தெலுங்கானா
- ஹைதெராபாத்
- மெரினா கிரிக்கெட் ஸ்டேடியம்
- காது கேளாதோர் கிரிக்கெட் மகளிர் பிரிவு எம்பி சாம்பியன்
- தின மலர்
சென்னை: ‘டெஃப் எனேபில்ட் பவுண்டேஷன்,’ சார்பில் சென்னையில் நடந்த கிரிக்கெட் போட்டியின் மகளிர் பிரிவில் மத்திய பிரதேச அணி சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு அணி 2வது இடம் பிடித்தது. தெலுங்கானா, ஐதராபாத் அடுத்த இடங்களை பிடித்தன. மெரினா கிரிக்கெட் அரங்கம், செயின்ட் பீட்ஸ் பள்ளி மைதானத்தில் நடந்த இத்தொடரின் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், ஐதராபாத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா பங்கேற்றன. ஆந்திரா சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், ஐதராபாத் 2வது, தெலுங்கானா 3வது இடம் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், ரொக்கப் பரிசு, வீரர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை கிரிக்கெட் நட்சத்திரம் முரளி விஜய் வழங்கினார். சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஆல் ரவுண்டராக திண்டிவனத்தை சேர்ந்த தமிழ்நாடு வீரர் அருண்குமார் தேர்வு செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் வீராங்கனை சைலஜா சுந்தர் உட்பட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய முரளி விஜய், ‘இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிப்பதில் நாம் தொடர்ந்து முக்கியத்துவம் தர வேண்டும் வழக்கமான வீரர்களை விட கூடுதலாக ஆற்றலையும் திறனையும் வெளிப்படுத்தும் இவர்கள் முன்னேறிட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிப்பது அவசியம். இவர்களின் அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கு தேவையான உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன்’ என்றார்.
The post காது கேளாதோர் கிரிக்கெட் மகளிர் பிரிவில் ம.பி. சாம்பியன் appeared first on Dinakaran.