×

திமுகவுக்கு அதிமமுக முழுஆதரவு

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழுஆதரவு அளிப்பதாக அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமமுக மாவட்டசெயலாளர்கள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் குழுக்கூட்டம் அவைத்தலைவர் தாஜ்தின் தலைமையில் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மாரி, முத்துக்குமார், செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக்கழகம் முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என கூறியுள்ளார்.

 

The post திமுகவுக்கு அதிமமுக முழுஆதரவு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,DMK ,Chennai ,Anna Dravida ,People's Development ,Kazhagam ,General Secretary ,Pasumbon Pandian ,Tajdin ,
× RELATED தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம்: பிரேமலதா அறிக்கை