×

தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசின் நிதியை தவறாக பயன்படுத்திய மோடி: ஆணையத்திற்கு 2 திரிணாமுல் எம்பிக்கள் கடிதம்

கொல்கத்தா: தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஒன்றிய அரசின் நிதியை பிரதமர் மோடி தவறாக பயன்படுத்திய, திரிணாமுல் எம்பிக்கள் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்பட்சத்தில், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு திரிணாமுல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி டெரிக் ஓ பிரையன் எழுதிய கடிதத்தில், ‘தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின்னர், மார்ச் 16ம் தேதி பிரதமரின் வாட்ஸ்அப் செய்தி ஒன்று வாக்காளர்களின் செல்போன்களுக்கு வந்தது.

அதில், ஒன்றிய பாஜக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 15ம் தேதி பிரதமர் மோடி, வாக்காளர்களுக்கு கடிதம் எழுதியது போன்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகம் அலுவலகம் மூலம் வெளியிடப்பட்ட இந்த செய்தியானது, ஒன்றிய அரசின் நிதியை தவறாக பயன்படுத்தி வெளியிட்டதாக கருதப்படுகிறது. ஒன்றிய அரசின் சாதனைகள் பற்றிய இத்தகைய விளம்பரமானது, பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வாக்காளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக கருதுகிறோம். மேலும், இந்த விளம்பரமானது தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறும் செயலாகும். எனவே வாட்ஸ்அப்பில் அனுப்பிய கடிதத்தை திரும்பப் பெற வேண்டும்.

இவ்விசயத்தில் பாஜக மற்றும் அக்கட்சியின் வேட்பாளரான பிரதமர் மோடிக்கு உரிய அறிவுறுத்தல்களை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். பிரதமரின் கடிதத்தை வாக்காளர்களுக்கு அனுப்பியதற்கு எவ்வளவு செலவு ஆனதோ, அதனை பாஜக மற்றும் பிரதமர் மோடியின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றொரு திரிணாமுல் காங்கிரஸ் சாகேத் கோகாய், தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ஆந்திராவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்தியது நடத்தை விதிகளை மீறிய செயல். இதுகுறித்து ஆந்திரப் பிரதேச தேர்தல் அதிகாரிக்கும் கடிதம் எழுதியுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post தேர்தல் நடத்தை விதிகளை மீறி அரசின் நிதியை தவறாக பயன்படுத்திய மோடி: ஆணையத்திற்கு 2 திரிணாமுல் எம்பிக்கள் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Moody ,Trinamool ,Commission ,KOLKATA ,TRINAMUL MPS ,ELECTION ,EU STATE ,MODI ,Lok Sabha elections ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் தலையிட முயற்சி...