×

மாம்பழ ஃபலூடா

தேவையானவை:

பால் – ஒரு கப் (காய்ச்சாதது)
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
கண்டெண்ஸ்டு மில்க் – 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழக்கூழ் – 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழத் துண்டுகள் – 2 டேபிள் ஸ்பூன்
மாம்பழ ஐஸ்க்ரீம், வெனிலா ஐஸ்க்ரீம் – தலா 2 டேபிள் ஸ்பூன்
துளசி விதைகள் – ஒரு டீஸ்பூன்
ஜெல்லித் துண்டுகள் – டேபிள் ஸ்பூன் (ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து துண்டுகளாக்கியது)
ஃபலூடா சேமியா – ஒரு டேபிள் ஸ்பூன்
பொடித்த நட்ஸ் வகைகள் – 2 டேபிள் ஸ்பூன்
ரோஸ் சிரப் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை:

துளசி விதைகளை அரை கப் தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஃபலூடா சேமியாவை வேக வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் பாலை ஊற்றி, பாதியாகும் வரை சுண்டக் காய்ச்சவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து, கரைந்த பின் இறக்கவும். பால் நன்கு ஆறிய பின் ஃப்ரிட்ஜில் குளிர வைக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் ஊறிய துளசி விதைகளைப் போடவும். இதன் மீது ஜெல்லித் துண்டுகள், மாம்பழத் துண்டுகள், கண்டென்ஸ்டு மில்க், பலூடா சேமியா, மாம்பழக்கூழ், குளிர்ந்த பால் என ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். இறுதியாக மேலே ஐஸ்க்ரீம் வைத்து, அதன் மீது ரோஸ் சிரப் ஊற்றி, நட்ஸ் வகைகள் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

The post மாம்பழ ஃபலூடா appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...