×

பாகற்காய் – மேத்தி பிரியாணி

தேவையானவை:

நீளமான பாகற்காய் – 2,
பாசுமதி அரிசி – ஒரு கப்,
கஸ¨ரி மேத்தி (காய்ந்த வெந்தயக்கீரை ) – 4 டேபிள் ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – ஒன்று,
உப்பு – தேவைக்கேற்ப.

அரைக்க:

தேங்காய்த் துருவல் – 6 டேபிள் ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2.

செய்முறை:

தேங்காய்த் துருவல், பச்சை மிளகாயை விழுதாக அரைக்கவும். பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கி, ஒரு தட்டில் வைத்து…வெல்லம், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து கால் மணி நேரம் ஊற விடவும்.
பிறகு நன்றாகக் கழுவி அலசி விடவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி…நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை வதக்கி, ஒன்றரை கப் நீர் ஊற்றி, அரிசி சேர்த்து…உப்பு, அரைத்த தேங்காய் விழுது, பாகற்காய், கஸ¨ரி மேத்தி சேர்த்துக் கலக்கவும். பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.

The post பாகற்காய் – மேத்தி பிரியாணி appeared first on Dinakaran.

Tags :
× RELATED செட்டிநாடு நண்டு குழம்பு