- பிற்பகல்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- திருமாவளவன்
- சென்னை
- சிதம்பரம்
- விழுப்புரம்
- விடுதலை புலிகள் கட்சி
- மக்களவைத் தேர்தல்
- ரவிக்குமார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை : சென்னை: மக்களவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும் விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிடுகிறார்கள். இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்,”சிதம்பரம் தொகுதியில் 6-வது முறையாக போட்டியிடுகிறேன். இந்த முறையும் நாடாளுமன்றத்துக்கு மக்கள் அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் போட்டியிடுகிறேன். நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது. ராகுல் காந்தி மேற்கொண்ட 2 பயணங்களும் நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான பயணம். சாதிய, மதவாத அரசியலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.
மக்களை சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிளவுபடுத்துகிறார்கள். வெறுப்பு அரசியலை விதைத்து மக்களை பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள். பா.ஜ.க., சங்பரிவார் அமைப்பு தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருவது ஆபத்தானது. பாஜகவின் வெறுப்பு அரசியலுக்கு தமிழ்நாட்டில் இடம் கொடுக்க கூடாது. பாஜகவின் செயல்பாடுகளை தெரிந்திருந்தும் பாமக கூட்டணியில் இணைந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. பாஜகவோடு பாமக கூட்டணி வைத்திருப்பது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. பா.ஜ.க. தங்களது கூட்டணி கட்சிகளில் ஊடுருவி நீர்த்துப் போகச்செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களை பாமக கைவிட்டாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை நிற்கும். திமுக கூட்டணிதான் தமிழ்நாட்டில் வலுவாகவும் கட்டுக்கோப்பாகவும் உள்ளது.
தமிழ்நாட்டுக்கு பிரதமர் வரலாம், போகலாம் ஆனால் பாஜக எதையும் செய்ய முடியாது. திமுக அதிமுக எதிரெதிர் அணியாக இருந்தாலும் சமூகநீதி என்று வந்துவிட்டால் அவர்கள் ஒருங்கிணைந்த சிந்தனை உடையவர்கள்.. ஆனால் பாஜக அப்படி அல்ல. பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதே நாட்டு மக்களின் வேட்கையாக உள்ளது. மக்களவை தேர்தல் என்பது மக்களுக்கும் சங்பரிவார்களுக்கும் இடையே நடக்கும் யுத்தம் ஆகும். தேர்தலில் மோசடி நடப்பதை தடுக்க, மக்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post தமிழ்நாட்டுக்கு பிரதமர் வரலாம், போகலாம் ஆனால் பாஜக எதையும் செய்ய முடியாது : திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.