×

அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் விற்பனைக்கு குவிந்த 5,500 நெல் மூட்டைகள்: ஆர்என்ஆர் ரக நெல் அதிகபட்சமாக ₹2,096க்கு விற்பனை

ராணிப்பேட்டை: அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று ஒரேநாளில் 5,500 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதில் ஆர்என்ஆர் ரக நெல் அதிகபட்ச விலையாக ₹2,096க்கு விற்பனை செய்யப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5,500 நெல் மூட்டைகளை கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு: இதில் ஏடிடி 37 வகை ரக குண்டு நெல் குறைந்த பட்ச விலை ₹1,352க்கும், அதிகபட்ச விலையாக ₹1,510க்கும் விற்பனை செய்யப்பட்டது. கோ 51 வகை நெல் குறைந்தபட்ச விலையாக ₹1,401க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹1,612க்கும், 606 வகை ரக நெல் குறைந்தபட்ச விலையாக ₹1,296 க்கும் மற்றும் அதிகப்பட்ச விலையாக ₹2,066க்கும், ஆர்.என்.ஆர் ரக நெல் குறைந்தபட்ச விலையாக ₹1,666க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹2,096க்கும் விற்கப்படுகிறது.

ஏடிடி 36 வகை ரக நெல் குறைந்த பட்ச விலையாக மற்றும் அதிகபட்ச விலையாக ₹1,765க்கும், சோனா ரக நெல் குறைந்தபட்ச விலையாக ₹1,269க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹1,769க்கும், நர்மதா ரக நெல் குறைந்தபட்ச விலையாக மற்றும் அதிகபட்ச விலையாக ₹1,719க்கும், காவேரி ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ₹1,569க்கும், என்.எல்.ஆர் ரக நெல் குறைந்தபட்ச விலையாக ₹1,669க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ₹1,729க்கு விற்பனை செய்யப்பட்டது.

விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் விவசாயிகள் சோளம், கம்பு, உளுந்து, கேழ்வரகு, தேங்காய் கொப்பரை, நிலக்கடலை ஆகிய விவசாய பயிர்களையும் அறுவடை செய்து அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வர வேண்டும். மேலும் விற்பனை கூட்டத்தில் நெல் மூட்டைகள் நல்ல விலை கிடைப்பதாலும் உடனுக்குடன் விற்று விவசாயிகள் பயன்பெறுகின்றனர் என்று அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.

The post அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் விற்பனைக்கு குவிந்த 5,500 நெல் மூட்டைகள்: ஆர்என்ஆர் ரக நெல் அதிகபட்சமாக ₹2,096க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Ammoor Regulation Hall ,RNR ,Ranipet ,
× RELATED காவேரிப்பாக்கத்தில் வெயில்...