×

தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க பிரதமர் மறுப்பது ஏன்?.. செல்வப்பெருந்தகை கேள்வி


சென்னை: பிரதமர் மோடி ஏன் தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார் என செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; நிவாரணத்தை பிச்சை எனக் கூறி தமிழக மக்களை நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டார். குஷ்பு கூறிய அதே கருத்தைத்தான் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். குஷ்புவின் அதே கருத்தை கூறிய அமைச்சர் நிர்மலா மன்னிப்பு கேட்க வேண்டும்.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை அனுப்பி சோதனை என்ற பெயரிலே மிரட்டி ஏறக்குறைய ஏழாயிரம் கோடி ரூபாயை பெற்றிருக்கிறார்கள். தேர்தல் பத்திர வழக்கில் உச்சநீதிமன்றம் சிறப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. பிரதமர் மோடி ஏன் தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க மறுக்கிறார். தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் வழங்காமல் குஜராத்துக்கு மட்டும் நிதியை வழங்குகிறது ஒன்றிய அரசு. 2,3 நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.

தமிழ்நாட்டில் ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். பாஜக கூட்டணிக்குச் சென்ற பாமக மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளது என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

The post தேர்தல் பத்திரம் குறித்து வாய் திறக்க பிரதமர் மறுப்பது ஏன்?.. செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Modi ,Tamil Nadu Congress Committee ,Tamil Nadu ,
× RELATED கருத்தை திரித்து கூறி ஆதாயம் தேட...