×

காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட சட்டவிரோதமாக பாஜக பணமாக்கியதாக புகார்: பிரபல புலனாய்வு ஊடகங்களில் ஒன்றான ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பரபரப்பு தகவல்

டெல்லி: காலாவதியான தேர்தல் நன்கொடை பத்திரங்களை பாஜகவுக்காக விதிகளை திருத்தி ஒன்றிய அரசு சட்டவிரோதமாக பணமாற்ற உதவி இருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முறைகேடுகள் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக முளைத்து கிளம்பியபடி உள்ளனர். அந்த வகையில் காலாவதியான தேர்தல் பத்திரங்களை கூட சட்ட விரோதமாக ஒன்றிய பாஜக அரசு பணமாக்கி இருப்பதாக பிரபல புலனாய்வு ஊடகமான ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையங்கள் வெளியிட்டுள்ள தேர்தல் பத்திரங்களை பெறுதல் மற்றும் பணமாக்கல் தொடர்பான புதிய தொகுப்பில் இந்த விவரங்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் பத்திர விதிகள்படி நன்கொடை பாத்திரத்தை பெற்ற கட்சிகள் 15 நாட்களுக்குள் அதை வங்கியில் செலுத்தி பணமாக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு மேமாதம் டெல்லியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளைக்கு சென்ற பாஜகவினர் 2 நாட்கள் காலாவதியான ரூ.10 கோடி மதிப்புள்ள பாத்திரங்களை சட்டவிரோதமாக பணமாக்கியது தெரியவந்துள்ளது.

அப்போதைய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தலைமையிலான நிதி அமைச்சகம் எஸ்.பி.ஐ வங்கிக்கு தொடர்ந்து அழுத்தம் தந்ததாக அந்த ஊடகம் கூறியுள்ளது. ஆளும் கட்சியின் அழுத்தம் காரணமாக வேறு வழியில்லாமல் பத்திர விற்பனையில் உள்ள விதிகள் தளர்த்தப்பட்டு காலாவதியான பத்திரங்கள் பணமாக்கப்பட்டன என்று தெரியவந்துள்ளது. இதற்கான விதிகளை திருத்துவதற்கு ஒன்றிய நிதி அமைச்சகம் மின்னல் வேகத்தில் அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதாவது 15 நாட்களுக்குள் அந்த பத்திரங்கள் வாங்கியதாக காட்டி திருத்தும் செய்யப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.

The post காலாவதியான தேர்தல் பத்திரங்களைக்கூட சட்டவிரோதமாக பாஜக பணமாக்கியதாக புகார்: பிரபல புலனாய்வு ஊடகங்களில் ஒன்றான ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் பரபரப்பு தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Delhi ,Union government ,
× RELATED தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் ஆலை...