×

பல்லடம் 4 பேர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் 5 பேர் ஆஜர்

 

திருப்பூர், மார்ச்19:திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறில் கடந்த செப்டம்பர் மாதம் 3-ம் தேதி மாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த மோகன்ராஜ் (49) அவரதுச் சகோதரர் செந்தில்குமார்(46), தாய் புஷ்பவதி(68) மற்றும் சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக வெங்கடேஷ் (27),அவரது தந்தை ஐயப்பன்(52), நண்பர்களான விஷால் (எ) சோனைமுத்து (22) மற்றும் செல்லமுத்து(24) மற்றும் வெங்கடேஷின் அண்ணன் செல்வம் (30) உள்ளிட்ட 5 பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர்.

மேலும், 800 பக்கத்துக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இதில் நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன் முன்னிலையில் 5 பேரையும் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நேற்று முதல் வரும் 22-ம் தேதி தொடர்ந்து 5 நாட்கள் எடுத்து விசாரிக்க உள்ளனர்.நேற்று சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்ட குற்றத்துறை அரசு வழக்கறிஞர் கனகசபாபதி ஆஜரானார்.

The post பல்லடம் 4 பேர் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றத்தில் 5 பேர் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,court ,Palladam ,Mohanraj ,Senthilkumar ,Pushbhavathy ,Siddhi Rathinambal ,Kallaginaar ,Tirupur district ,Tirupur court ,
× RELATED சுரைக்காய் வரத்து அதிகரிப்பு