×

தேர்தல் விதிமுறைகள் அமலால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி தயார்

 

திருப்பூர், மார்ச்19: தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில் பெட்டி கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.நாடாளுன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் திருப்பூர் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டன. அரசு திட்டங்கள் தொடர்பான விளம்பர பலகைகளில் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டன.

இதுபோல் மாநகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலகங்களில் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதுடன்,விளம்பர பலகையில் இருந்த தலைவர் படங்களும் மறைக்கப்பட்டன.

பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் பெயர்,சின்னங்கள் மற்றும் கொடிகள் ஆகியவை மறைக்கப்பட்டன. இதுபோல் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. இதில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை போட்டனர். மேலும், பறக்கும் படையினரும் மாவட்டம் முழுவதும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

The post தேர்தல் விதிமுறைகள் அமலால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை போட கலெக்டர் அலுவலகத்தில் பெட்டி தயார் appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...