×

ஊட்டி நீதிமன்றம் செல்லும் சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது

 

ஊட்டி,மார்ச்19: ஊட்டியில் இருந்து நீதிமன்றம் செல்லும் சாலையில் வேகத்தடைகளுக்கு வர்ணம் பூப்படாததால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்த நீதிமன்றம் தற்போது பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள காக்காதோப்பு பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஊட்டியில் இருந்து சுமார் 3 கி.மீ., தூரம் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.நீதிமன்றம் செல்லும் பிரதான சாலையாக தற்ேபாது தமிழகம் மாளிகை,ஆர்சி., காலனி சாலை உள்ளது.

இச்சாலை பழுதடைந்திருந்த நிலையில், இதனை சீரமைக்க வேண்டும் என நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியததை தொடர்ந்து இச்சாலை சீரமைக்கப்பட்டது. அத்தோடு, இச்சாலையில் வேகமாக வாகனங்கள் செல்வதை தடுக்க வகையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகளும் அமைக்கப்பட்டள்ளது. ஆனால், சாலை அமைக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும், இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படவில்லை.

மேலும், வேகத்தடை உள்ளதற்கான எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை. இதனால், இச்சாலையில் ெசல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் இச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் வேகத்தடை உள்ளது தெரியாமல் வேகமாக செல்லும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் இச்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு உடனடியாக வர்ணம் பூசும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post ஊட்டி நீதிமன்றம் செல்லும் சாலையில் வர்ணம் பூசப்படாத வேகத்தடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் நீடிக்கிறது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Kakathoppu ,Pinkerpost ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...