சேலம், மார்ச் 19: சேலம் மணியனூர் பாரதிநகரைச் சேர்ந்தவர் செல்வம். இவர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒற்றை அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட், கன்ஸ்ட்ரக்சன் தொழில் செய்து வருகிறேன். கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த முன்னாள் மண்டல குழு தலைவரும், அதிமுக எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளருமான மோகன், அவரது மனைவி சாந்தி, எனது மனைவி பரிமளா ஆகியோர் சேர்ந்து கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலை செய்து வந்தோம். இந்நிலையில் சாந்தி, கம்பெனியின் பங்குதாரர் பொறுப்பில் இருந்து விலகி விட்டார். இது தொடர்பான வழக்கில் எனக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து சாந்தி அப்பீல் செய்துள்ளார்.
இந்நிலையில் நாங்கள் ஒன்றாக தொழில் செய்த போது, நெத்திமேடு பகுதியில் 1,837 சதுரஅடி நிலத்தை கூட்டு கிரயமாக வாங்கினோம். அந்த சொத்தில் எனக்கும் பங்கு உள்ளது. ஆனால் மோகன், அவர் மட்டுமே நிலத்திற்கு உரிமையாளர் என கூறி ஆக்கிரமித்துள்ளார். அங்கிருந்த மரங்களை கட்டிடம் கட்டுவதற்காக வெட்டி உள்ளார். நான் சென்று கேட்டபோது அவரது ஆட்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார் appeared first on Dinakaran.