×

அதிருப்தி காங். எம்எல்ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம் இமாச்சல் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: இமாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 6 பேர் மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி பாஜ வேட்பாளருக்கு வாக்களித்தனர். கொறாடா உத்தரவை மீறி கட்சி மாறி வாக்களித்த 6 எம்எல்ஏக்களை கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் குல்தீப் சிங் பதானியா உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 6 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா,தீபாங்கர் தத்தா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகரின் தகுதிநீக்க உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து 4 வாரங்களில் பதிலளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

மேலும் நீதிபதிகள் கூறுகையில், மனு மீதான தீர்ப்பு நிலுவையில் உள்ளதால், அதிருப்தி எம்எல்ஏக்கள் சட்டமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கவோ,வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 6 தொகுதி இடைத்தேர்தல் மனு நிலுவையில் இருக்கும் போது நிறுத்தி வைக்கப்பட வேண்டுமா என்பதை ஆராய வேண்டி உள்ளது என்று கூறி அடுத்த விசாரைணயை மே 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

The post அதிருப்தி காங். எம்எல்ஏக்கள் 6 பேர் தகுதிநீக்கம் இமாச்சல் சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Supreme Court ,Himachal ,Speaker ,New Delhi ,Himachal Pradesh ,BJP ,Rajya Sabha ,Korada ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு