சட்டோகிராம்: இலங்கை அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அகமது சவுத்ரி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 235 ரன் குவித்து ஆல் அவுட்டானது.
அபாரமாக விளையாடிய ஜனித் லியனகே 101 ரன் (102 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சரித் அசலங்கா 37, கேப்டன் குசால் மெண்டிஸ் 29, தீக்ஷனா 15, சதீரா 14 ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் தஸ்கின் அகமது 3, முஸ்டாபிசுர், மிராஸ் தலா 2, சர்கார், ரிஷத் உசைன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 40.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ரன் எடுத்து வென்றது. டன்ஸிட் ஹசன் 84, ஹ்ரிதய் 22, மிராஸ் 25 ரன் எடுத்தனர். முஷ்பிகுர் ரகிம் – ரிஷத் உசைன் ஜோடி 7வது விக்கெட்டுக்கு 59 ரன் சேர்த்து அசத்தியது. முஷ்பிகுர் 37 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), ரிஷத் உசைன் 48 ரன் (18 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ரிஷத் உசைன் ஆட்ட நாயகன் விருதும், நஜ்முல் ஷான்டோ தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
The post 3வது ஒருநாள் போட்டியில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வங்கதேசம்: ஜனித் லியனகே சதம் வீண் appeared first on Dinakaran.