×

பாரிபா ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் அசத்தல்

* மகளிர் ஒற்றையர் பைனலில் கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரியுடன் (28 வயது, 9வது ரேங்க்) மோதிய போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (22 வயது, 1வது ரேங்க்) 6-4, 6-2 என நேர் செட்களில் எளிதாக வென்று 2வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பாரிபா ஓபனில் ஸ்வியாடெக் 2வது முறையாக பட்டம் வென்றுள்ளார். முன்னதாக, 2022ல் அவர் இங்கு கோப்பையை கைப்பற்றி இருந்தார்.

* கிம் கிளிஸ்டர்ஸ் (2003,2005), செரீனா வில்லியம்ஸ் (1999,2001) லிண்ட்சே டேவன்போர்ட் (1997, 2000)
ஸ்டெபி கிராஃப் (1994, 1996), மார்டினா நவ்ரத்திலோவா (1990, 1991) ஆகியோரும் தலா 2 முறை
பாரிபா ஓபனில் பட்டம் வென்றுள்ளனர்.

* ஆண்கள் பிரிவில் ஜோகோவிச் (2008, 2011, 2014, 2015, 2016), பெடடர் (2004, 2005, 2006, 2012, 2017) இருவரும் தலா 5 முறை சாம்பியனாகி முதலிடம் வகிக்கின்றனர். நடால் (2007, 2009, 2013) 3 முறை சாம்பியன் ஆகியுள்ளார்.

The post பாரிபா ஓபன் டென்னிஸ் ஸ்வியாடெக் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Bariba Open Tennis ,Sviatek ,Ika Swiatek ,Greece ,Maria Zachary ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை