- சிஎஸ்கே-ஆர்சிபி
- கிரிக்கெட் போட்டி
- சென்னை
- சென்னை
- பெங்களூர்
- மட்டைப்பந்து
- சிஎஸ்கே - ஆர்சிபி
- சேப்பாக்கம் மைதானம்
- ஐபிஎல்
- தின மலர்
சென்னை: சிஎஸ்கே – ஆர்சிபி கிரிக்கெட் போட்டிகான டிக்கெட் விற்பனைக்கான இணையதளம் முடங்கியது. 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஐபிஎல் டிக்கெட் விற்பனை இணையதளம் முடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் கடந்த 16 வருமாக ஐபிஎல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான 17வது சீசன் ஐபிஎல் திருவிழா இன்னும் 4 நாட்களில் தொடங்க உள்ளது. வரும் 22ம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முதல் கோப்பைக்கான பசியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் இன்று தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரை ஒரே போட்டியில் காண இரு அணி ரசிகர்களும் டிக்கெட் வாங்க முற்பட்டதால் இணையதளம் முடங்கியது. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் கிடைக்கவில்லை என்ற கோபத்தில் சென்னை அணி நிர்வாகத்தை திட்டி தீர்த்து வருகின்றனர்.
இதையடுத்து தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணையதளம் முடங்கியதற்கு பேடிஎம் இன்சைடர் மன்னிப்பு கோரியுள்ளது. “சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான ஐபிஎல் தொடக்கப் போட்டிக்கு அமோக வரவேற்பு அளித்ததற்கு நன்றி. துரதிர்ஷ்டவசமாக, எதிர்பாராதவிதமாக எழுந்த தொழில்நுட்ப சிக்கல் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கும். இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளது.
The post சிஎஸ்கே – ஆர்சிபி கிரிக்கெட் போட்டிகான டிக்கெட் விற்பனைக்கான இணையதளம் முடங்கியது: ரசிகர்கள் ஆத்திரம் appeared first on Dinakaran.