சிட்டகாங்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியின்போது தசைப் பிடிப்பு காரணமாக வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்பட்டார். இவரை நடப்பு ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்று பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஏற்கனவே இலங்கை அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் போட்டியில் வங்கதேச அணியும் 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்று சம நிலையில் இருந்தன. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சட்டோகிராமில் உள்ள ஜாஹூர் அகமது சவுத்ரி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியின் போது வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் தசைப் பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால் அவரால் நடக்க கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக முஸ்தஃபிசுர் ரஹ்மான் மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்டார்.
இந்த தொடரில் முதல் முறையாக 11 பேர் கொண்ட அணியில் முஸ்தஃபிசுர் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவரை நடப்பு ஐபிஎல் தொடருக்காக ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2 கோடிக்கு எடுத்துள்ளது.
The post தசைப் பிடிப்பால் மைதானத்தில் இருந்து தூக்கிச் செல்லப்பட்ட வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான்! appeared first on Dinakaran.