×

ஜம்முகாஷ்மீர் பந்திபோரா பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பந்திபோரா: ஜம்முகாஷ்மீரில் உள்ள பந்திபோரா பகுதியில் வழக்கத்தை விட கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சமவௌி பகுதிகளில் மிதமான பனிப்பொழிவும், உயரமான பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் நீடிக்கிறது. கடும் பனியால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் படர்ந்துள்ள பனியை அகற்றும் பணி நடந்து வருகிறது.

ஜம்முகாஷ்மீரில் கடந்த ஒரு மாதமாக வரலாறு காணாத பனிப்பொழிவு காணப்படுகிறது. காணும் இடமெல்லாம் வெள்ளைப்போர்வை போர்த்தியது போல பனி சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில் பந்திபோரா, குரேஷ் ஆகிய இடங்களில் சாலை முழுவதும் பனிக்கட்டிகள் சூழ்ந்துள்ளன.

பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஜம்முகாஷ்மீரில் வழக்கத்தை விட பனிப்பொழிவு காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

The post ஜம்முகாஷ்மீர் பந்திபோரா பகுதியில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Bandipora ,Jammu and Kashmir ,Jammukashmir ,Samawawi ,Dinakaran ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!