×

பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்

இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின்இந்தியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வந்தது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று அதிகாலை நடந்த இறுதி போட்டியில் 2ம் நிலை வீரரான ஸ்பெயினின் 20 வயதான கார்லோஸ் அல்காரஸ், 4ம் நிலை வீரரான ரஷ்யாவின் 28வயதான டேனியல் மெட்வெடேவ் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முதல் செட்டில் கடும் போட்டி இருந்தது. டைப்ரேக்கர் வரை சென்ற அந்த செட்டை 7(7)-6(5) என அல்காரஸ் கைப்பற்றினார். 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர் 6-1 என எளிதாக தன்வசப்படுத்தினார். மொத்தம் ஒரு மணி நேரம் 42 நிமிடம் இந்த போட்டியில் 7(7)-6(5) , 6-1 என அல்காரஸ் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற அல்காரசுக்கு இந்திய மதிப்பில் ரூ.9.12கோடி பரிசு மற்றும் 1000 தரவரிசை புள்ளிகள் கிடைத்தது.

மெட்வெடேவ்க்கு ரூ4.84 கோடி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டும் பைனலில் மெட்வெடேவை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மகளிர் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான போலந்தின் 22வது வயது இகா ஸ்வியாடெக், 9ம் நிலை வீராங்கனையான கிரீஸ் நாட்டின் 28 வயதான மரியா சக்காரி மோதினர். முதல் முதல் செட்டை 6-4 என ஸ்வியாடெக் கைப்பற்றிய நிலையில், 2வது செட்டை 6-0 என எளிதான தன்வசப்படுத்தினார். முடிவில் 6-4,6-0 என ஸ்வியாடெக் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு ரூ.ரூ.9.12கோடியும், சக்காரியாவுக்கு ரூ.4.84 கோடியும் பரிசு வழங்கப்பட்டது.

The post பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : BNP Paribas Open Tennis ,Algaras ,Sviatek ,Indian Wells ,BNP Paribas Open ,Indian Wells, USA ,Spain ,Carlos Algarz ,Algarz ,Dinakaran ,
× RELATED இத்தாலி ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் சாம்பியன்