×

2வது டி.20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்

சார்ஜா: ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் அயர்லாந்து வென்ற நிலையில் 2வது போட்டி சார்ஜாவில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 152 ரன் எடுத்தது. அதிகபட்சமாக முகமது நபி 59, செடிகுல்லா அடல் 35, கேப்டன் ரஷித்கான் 24 ரன் எடுத்தனர்.

பின்னர் களம் இறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 142ரன்களே எடுத்தது. இதனால் 10 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது. 25 ரன் அடித்ததுடன் 14 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்திய ரஷித்கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். 1-1 என தொடர் சமனில் இருக்க 3வது மற்றும் கடைசி போட்டி இன்று இரவு 9 மணிக்கு நடக்கிறது.

The post 2வது டி.20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Ireland ,2nd T20 ,Sharjah ,T20 ,Dinakaran ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி