×

மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு: இம்ரான் கான் வலியுறுத்தல்

இஸ்லாமாபாத்: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் மாஜி பிரதமரான இம்ரான் கானுக்கு எதிராக ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 8ம் தேதி அங்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்ரான் கானின் ஆதரவு பெற்ற சுயேச்சைகள் 90 இடங்களில் வெற்றி பெற்றனர்.

ஆனால், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) மற்றும் பாக்.மக்கள் கட்சியும் இணைந்து கூட்டணி அரசை அமைந்துள்ளன. இந்நிலையில் அல் காதிர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் இம்ரான் கான் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கடந்த மாதம் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

தனது கட்சி 3 கோடிக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது. ஆனால்,17 கட்சிகள் அடங்கிய கூட்டணி கட்சிகளும் அதே அளவு வாக்குகளை பெற்றுள்ளன. அதிகாரிகளின் சதியால் கட்சியின் சின்னமான கிரிக்கெட் மட்டை மறுக்கப்பட்டது. அதன் பிறகு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் கட்சிக்கு உரிய பங்கு அளிக்கப்படவில்லை. மக்களின் தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட வேண்டும்’’ என்றார்.

The post மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு: இம்ரான் கான் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Imran Khan ,Islamabad ,Pakistan ,
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு