×

சோமாலிய கடற்கொள்ளையர்களின் சதி இந்திய கடற்படை முறியடிப்பு

புதுடெல்லி: இந்திய பெருங்கடலில் அமைதியை ஏற்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் செல்லும் கப்பல்களை கடத்தி கொள்ளையடிக்கின்றனர். இஸ்ரேல்-ஹமாஸ் போரை தொடர்ந்து செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதை தொடர்ந்து,முக்கிய கடற்வழி பாதைகளின் பாதுகாப்புக்கு 10க்கும் மேற்பட்ட இந்திய கடற்படை கப்பல்கள் ரோந்து மேற்கொண்டுவருகின்றன. சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட எம்.வி.ருயென் கப்பலை இந்திய கடற்படை நேற்று முன்தினம் மீட்டு அதில்,பணய கைதிகளாக இருந்த 17 மாலுமிகள் விடுவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிட்டத்தட்ட 40 மணி நேரம் நடந்த நடவடிக்கையில், ஐஎன்எஸ் கொல்கத்தா, கடலோர ரோந்து கப்பல் ஐஎன்எஸ் சுபத்ரா, கடற் பாதுகாப்பு டிரோன்கள் மற்றும் சி17 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், மார்க்கோஸ் என்ற கடற்படை கமாண்டோக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டனர். 37,800 டன் சரக்குகளுடன் இருந்த கப்பலும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டுவரப்படுகிறது. இதில் கடற்கொள்ளையர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்திய பெருங்கடலில் அமைதியை ஏற்படுத்துவதற்கு இந்தியா உறுதி பூண்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஏடென் வளைகுடாவில் நேற்று ஒரு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன்கள், ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இங்கிலாந்து ராணுவத்தின் கடல்சார் வணிக செயல்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

The post சோமாலிய கடற்கொள்ளையர்களின் சதி இந்திய கடற்படை முறியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Navy ,New Delhi ,Indian Ocean ,Somalia ,Africa ,Israel ,-Hamas war ,Red Sea ,
× RELATED கடற்கொள்ளை தடுப்பு ஐஎன்எஸ் சாரதா கப்பலுக்கு விருது