×

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல்: யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடலோர பகுதியில் இருந்து நேற்று அதிகாலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதிச்சீட்டு பெற்று பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இரவில் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த இலங்கை கடற்படையினர் இரண்டு விசைப்படகை சிறைபிடித்தனர்.

படகில் இருந்த மீனவர்கள் ஆரோக்கியசுகந்தன் (படகு உரிமையாளர்), சாமுவேல், அந்தோணி, பூமிநாதன், சுப்பிரமணி, அடிமை யோசுவா, இருளாண்டி, சுந்தரபாண்டி, சீனிப்பாண்டி, பாலுச்சாமி, சக்திவேல் உட்பட 21 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். கைப்பற்றப்பட்ட இரண்டு படகும் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. இலங்கை கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து 21 மீனவர்களையும் இலங்கை யாழ்ப்பாணம் கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட 21 மீனவர்களுக்கும் மார்ச் 27 வரை நீதிமன்ற காவல் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 21 பேருக்கு மார்ச் 27 வரை நீதிமன்ற காவல்: யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nadu ,Sri Lanka Navy ,Jaffna ,Jaffna court ,Sri Lankan Navy ,Ramanathapuram district Rameswaram ,Dinakaran ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...