×

பாஜக தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரியில் போட்டியிட தயார்: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி: பாஜக தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயார் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியில் பாஜ போட்டியிடுவது ரொம்ப நாளைக்கு முன்பே முடிவாகி விட்டது. ஆனால், தேர்தல் தேதி அறிவித்த பின்னும் போட்டியிட ஆள் கிடைக்காமல் பாஜ திண்டாடி வருகிறது. புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை எம்பி தேர்தலில் போட்டியிட பலரும் வலியுறுத்தி வந்தனர். மாநில அரசியலை விட்டு விலக விரும்பாத அவர் கழுவுற மீனில் நழுவுற மீனாக இருந்து வந்தார்.

இந்நிலையில், முன்னாள் காவல்துறை ஐஜி சந்திரன் பாஜவில் இணையும் நிகழ்ச்சி இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்றார். அவரிடம் நிருபர்கள் எம்பி தேர்தலில் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நமச்சிவாயம், ‘‘புதுவை மக்களவை தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து மத்திய செயற்குழு முடிவு செய்ய வேண்டும். தலைமை செயற்குழு என்னை புதுச்சேரி வேட்பாளராக நிற்க சொன்னால், நான் தேர்தலில் நின்றுதான் ஆக வேண்டும் என்றார்.

புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் யார்? என இழுபறி நீடித்து வந்த நிலையில் கட்சி தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பாஜக தலைமை உத்தரவிட்டால் புதுச்சேரியில் போட்டியிட தயார்: அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Puducherry ,Minister ,Namachiwai ,BAJA ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...