×

பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்

மண்டபம்: பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தில் மண்டபம் ரயில் நிலையம் பகுதியில் இருந்து சரக்கு ரயில் வண்டி மூலம் மின் கம்பம் கொண்டு வந்து அமைக்கும் பணிகளும் மற்றும் பாம்பன் பகுதியிலிருந்து தூக்கு பாலம் நகர்த்தி செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டபம் கடற்பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2.5 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் புதிதாக ரயில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டபம் பகுதியிலிருந்து பாம்பன் நடுப்பாலம் வரை இரும்பு கருடர்கள் அமைத்து அதற்கு மேல் தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து மின் கம்பம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக சத்திரக்குடி பகுதியிலிருந்து தயாரிக்கப்பட்ட மின் கம்பங்களை வாகனம் மூலம் மண்டபம் தோணித்துறை பகுதிக்கு கொண்டு வந்து பணியாளர்கள் இறக்கி வைத்தனர். அதன் பின்னர் மின் கம்பங்களை பணியாளர்கள் சரக்கு ரயிலில் ஏற்றி நடுப்பலாம் வரை ஜே.சி.பி மூலம் மின் கம்பம் அமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாலத்தில் பணிகள் நடைபெற்று வந்தாலும் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தில் ரயில் எஞ்சின் மற்றும் ரயில் பெட்டி மற்றும் சரக்கு ஏற்றும் இரண்டு ட்ராலிகளுடன் பல டன் மதிப்பு எடை உள்ள பொருட்களை வைத்து சோதனை நடந்ததாகவும் கருதலாம். இந்நிலையில் இரண்டு புள்ளி ஐந்து கிலோ மீட்டர் தொலைதூரத்தில் கடலில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய ரயில் பாலம் பணிகள் மண்டபம் பகுதியிலிருந்து நடுப்பாலம் வரை 90 சதவீதம் பணிகள் முடிவடைந்தது.

பாம்பன் பகுதியிலிருந்து நடுப்பாலம் வரை கடலில் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. புதிய பாலத்தில் கப்பல் கடந்து செல்லும்போது அதிநவீன டெக்னாலஜி உடன் மேல் நோக்கி செல்லும் மாதிரி அமைப்புடன் 700 கிலோ டன் எடையளவில் தூக்குப்பாலம் அமைக்கும் பணிகள் பாம்பன் பகுதியில் நடைபெற்று முடிவடைந்தது. இதனை தொடர்ந்து தூக்குப்பாலம் பணிகள் முடிவடைந்து நிலையில் தூக்கு பாலத்தை நடுப்பாலத்திற்கு கொண்டு செல்லும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்பன் பகுதியிலிருந்து கடலில் அமைக்கப்பட்டுள்ள தூண்கள் மேல் ட்ராலி மூலம் தூக்கு பாலத்தை பணியாளர்கள் நதர்த்தி கொண்டு செல்கின்றனர். தூக்கு பாலம் அதிக எடை கொண்டுள்ளதால் நடுப்பாலத்திற்கு கொண்டு செல்ல 30 நாள்களுக்கு மேல் ஆகும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.

தூக்குப்பாலத்தை நகரத்தி நடுபாலத்தில் கொண்டு சென்று அமைத்த உடன் பாம்பன் பகுதியில் இருந்து நடுப்பாலம் வரை தூண்களில் இரும்பு கருடர்கள் பொருத்தப்பட்டது. அதற்கு மேல் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு பின்பு பணிகள் முழுவதும் முடிவடைந்த பின்பு ரயில் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க வாய்ப்பு உள்ளது.

The post பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pampan Sea ,Mandapam ,Pampan ,
× RELATED மண்டபம் ரயில் நிலையத்தில் குடிநீர் வசதி பயணிகள் வலியுறுத்தல்