×

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!

ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை 2 படகுடன் கைது செய்துள்ளது. இந்திய எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிகழ்வு தொடர் கதையாக உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 22 மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 15ம் தேதி நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை படகுடன் கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் 21 பேரும், 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்டு காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மீன் பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 21 தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்! appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Neduntivu ,Sri Lankan Navy ,Indian border ,
× RELATED இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம் மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்