×
Saravana Stores

பூனாம்பாளையத்தில் கோழிவளர்ப்பு குறித்து பண்ணைபள்ளி

 

சமயபுரம், மார்ச் 17: மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் கிராமத்தில் லாபகரமான கோழி வளர்ப்பு பற்றிய பண்ணை பள்ளி நடைபெற்றது. பூனாம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் பயிற்சி நடைபெற்றது. பண்ணை பள்ளியின் முதலாம் வகுப்பில் கால்நடை மருத்துவர் செந்தில்குமார் கோழி வளர்ப்பு முறைகள் பற்றி விளக்க உரையாற்றினார். மேலும் கொட்டகை அமைக்கும் முறைகளான கூண்டுமுறை மற்றும் திறந்தவெளிமுறை பற்றி எடுத்துரைத்தார். மேலும் கோழி குஞ்சுகளை தேர்ந்தெடுக்கும்முறை பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சின்னபாண்டி தலைமை வகித்தார். வேளாண்மை உதவி அலுவலர் பார்த்திபன் மாநில திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை உதவி தொழில்நுட்ப மேலாளர் கவுசிகா மற்றும் ஸ்வேதா ஆகியோர் மேற்கொண்டனர். பெரம்பலூர் தனியார் கல்லூரி மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனம் இறுதி ஆண்டு மாணவிகள் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர்.

The post பூனாம்பாளையத்தில் கோழிவளர்ப்பு குறித்து பண்ணைபள்ளி appeared first on Dinakaran.

Tags : Farm School on Poultry Farming ,Poonampalayam ,Samayapuram ,Poonampalayam village ,Mannachanallur ,Department ,Poonampalayam on ,Poonampalayam Farm School ,Dinakaran ,
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில்...