×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

 

கூடலூர், மார்ச் 17: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கூடலூர் காந்தி சிலை அருகே அனைத்து அரசியல், பொதுநல அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமைக்கு மதத்தை அடிப்படையாக்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வாசு தலைமை வகித்தார். முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் வாப்பு ஹாஜி துவக்கி வைத்தார். திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் மற்றும் பல்வேறு அரசியல் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பாண்டியராஜ், லியாகத் அலி, இளஞ்செழியன், சகாதேவன், சிகே மணி, முகமது கணி, அனீபா உள்ளிட்ட பலர் உரையாற்றினர். மக்களிடம் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

The post குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Gandhi ,statue ,Dinakaran ,
× RELATED புதிய யானைகள் வழித்தட பிரச்னை செல்போன் டவரில் ஏறி விவசாயி போராட்டம்