×

₹25 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பேர் கைது

ஊத்தங்கரை, மார்ச் 17: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நாராயண நகரைச் சேர்ந்தவர் காமத்(48). இவர் நேற்று முன்தினம் மதியம், ஊத்தங்கரை- கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள வங்கிக்கு டூவீலரில் சென்றார். அப்போது, வங்கி வாசலில் பின்தொடர்ந்து வந்த 2 பேர், 100 ரூபாய் நோட்டு கீழே விழுந்து விட்டதாக கூறி அவரை திசை திருப்பினர். அப்போது, திடீரென அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ₹25 ஆயிரத்தை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர். ஆனால், சுதாரித்துக் கொண்ட அவர், இருவரையும் அங்கிருந்தவர்களின் உதவியுடன் கையும், களவுமாக மடக்கி பிடித்தார்.

பின்னர், ஊத்தங்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், அவர்கள் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த விமல்(47), ஆந்திரா மாநிலம் விதுலபள்ளியைச் சேர்ந்த கிஷோர் குமார்(48) என்பது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்து, ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கிருஷ்ணகிரி கிளை சிறையிலடைத்தனர்.

The post ₹25 ஆயிரத்தை அபேஸ் செய்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,Kamath ,Uthangarai Narayana Nagar, Krishnagiri district ,Oodhangarai- Krishnagiri ,
× RELATED மக்களுடன் முதல்வர் முகாம்