×

பாரிபா ஓபன் டென்னிஸ்: பைனலில் இகா – சாக்கரி


இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் இகா ஸ்வியாடெக் – மரியா சாக்கரி மோதுகின்றனர். அரையிறுதியில் உக்ரைனின் மார்தா கோஸ்டியுக் (21வயது, 32வது ரேங்க்) உடன் மோதிய போலந்து நட்சத்திரம் ஸ்வியாடெக் (22 வயது, 1வது ரேங்க்), அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி ஒரு மணி, 9 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரையிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் (20 வயது, 3வது ரேங்க்) உடன் மோதிய கிரீஸ் வீராங்கனை மரியா சாக்கரி (28 வயது, 9வது ரேங்க்) 6-4, 6-7 (5-7), 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 41 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

2023 அக்டோபரில் நடந்த மெக்சிகோ ஓபன் தொடருக்கு பிறகு, இப்போதுதான் சாக்கரி மீண்டும் பைனலில் விளையாட உள்ளார். இறுதிப் போட்டியில் இகா ஸ்வியாடெக் – மரியா சாக்கரி மோதுகின்றனர். இதே தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் வெஸ்லி கூல்ஹாப் (நெதர்லாந்து) – நிகோலா மெக்டிக் (குரேஷியா) இணை 7-6(7-2), 7-6(7-4) என்ற நேர் செட்களில் மார்செலோ கிரானோலர்ஸ் (ஸ்பெயின்) – ஹோரசியோ ஜெபல்லோஸ் (அர்ஜென்டீனா) ஜோடியை போராடி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

The post பாரிபா ஓபன் டென்னிஸ்: பைனலில் இகா – சாக்கரி appeared first on Dinakaran.

Tags : Paribas Open Tennis ,Iga ,Zachary ,Ika Svyatek ,Maria Zachary ,BNP Paribas Open tennis ,Zwiatek ,Bariba Open Tennis ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: இகா மீண்டும் சாம்பியன் ஹாட்ரிக் சாதனை