×
Saravana Stores

ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென்

லண்டன்: ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்திய வீரர் லக்‌ஷயா சென் தகுதி பெற்றார். காலிறுதியில் முன்னாள் சாம்பியன் லீ ஜி ஜியாவுடன் (மலேசியா) மோதிய லக்‌ஷயா சென் (22 வயது) 20-22 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு சிறப்பாக விளையாடிய அவர் 21-16, 21-19 என அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி வெற்றியை வசப்படுத்தினார். விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 11 நிமிடத்துக்கு நீடித்தது.

The post ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் அரையிறுதியில் லக்‌ஷயா சென் appeared first on Dinakaran.

Tags : Lakshya Sen ,All England Badminton ,London ,All England Championship Badminton Series ,Lee Ji Jia ,Malaysia ,England Badminton ,Dinakaran ,
× RELATED லண்டனில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்..!!