×

புதிய கல்விக் கொள்கை என்பது வேறு: PM SHRI SCHOOLS திட்டம் என்பது வேறு : தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

சென்னை : புதிய கல்விக் கொள்கை என்பது வேறு: PM SHRI SCHOOLS திட்டம் என்பது வேறு என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், “PM SHRI SCHOOLS திட்டத்தில் கையெழுத்திடுவது குறித்து ஆய்வு மேற்கொள்ள தனிக்கமிட்டி அமைக்கப்படும். புதிய கல்விக் கொள்கை என்பது வேறு: PM SHRI SCHOOLS திட்டம் என்பது  வேறு. ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என ஒன்றிய அமைச்சரிடமே தெரிவித்து விட்டோம். தமிழகத்துக்கு என்ன தேவை என்பதறிந்து மாநில கல்விக் கொள்கையை உருவாக்கி வருகிறோம். கல்வி பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் .கல்வி மாணவச் செல்வங்களுக்கானது அதில் அரசியல் செய்யக்கூடாது,”இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக திருச்சி மேலரண் சாலையில் ராசி மற்றும் சுமதி பப்ளிகேஷன்களில் இரண்டு மற்றும் மூன்றாவது விற்பனை நிலையத்தை இன்று (சனிக்கிழமை) பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார். இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அவர், “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழகம் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களையும், சங்கத்தமிழ் இலக்கியங்களையும், நவீன இலக்கியங்களையும், அரிய நூல்களையும் பதிப்பித்து, அதனை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை 340 நூல்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் 600 நூல்களை பதிப்பிக்கவும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம்.

இந்த நூல்கள் எல்லாம் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிய முறையில் கிடைத்திட வேண்டும் எனும் நோக்கில், முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 100 விற்பனை நிலையங்களை மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்களில் அமைப்பது என முடிவெடுத்து,  முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளில் முதல் விற்பனை நிலையத்தைத் தொடங்கினோம். தொடர்ந்து திருச்சியில் இரண்டு மற்றும் மூன்றாவது விற்பனை நிலையத்தை இன்று திறந்து வைத்துள்ளோம். #திருச்சி மேலரண் சாலையில் உள்ள பழம்பெருமை வாய்ந்த ராசி மற்றும் சுமதி பதிப்பகங்களில் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை நிலையம் செயல்படத் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

தமிழ்நாட்டுக்கு என மாநில கல்விக் கொள்கை வகுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வித்துறை நிபுணர்கள் அடங்கிய குழுவும் அதற்காக அமைக்கப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்க,

புதிய கல்விக் கொள்கையை ஏன் எதிர்க்கிறீர்கள் என மத்திய அரசு எங்களிடம் கேட்கிறது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் .கல்வி மாணவச் செல்வங்களுக்கானது அதில் அரசியல் செய்யக்கூடாது. அதனால்தான், புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கிறது. இதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. ஆகையால், புதிய கல்விக் கொள்கையை என்றைக்குமே தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது” என்றார்.

The post புதிய கல்விக் கொள்கை என்பது வேறு: PM SHRI SCHOOLS திட்டம் என்பது வேறு : தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.

Tags : PM ,Tamil Nadu ,School ,Education Minister ,Anbil Mahesh ,Chennai ,Minister ,Anpil Mahesh ,Trichy ,PM SHRI SCHOOLS… ,Tamil ,Nadu School ,Education ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டத்தில் வெப்ப அலை...