×

₹26.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தியாகராஜநகர் ரயில்வே மேம்பாலம் திறப்பு

*அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்

நெல்லை : மகாராஜநகர் – தியாகராஜநகர் இடையே அமைக்கப்பட்ட ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். பாளை. உழவர் சந்தை அருகே மகாராஜநகருக்கும் – தியாகராஜநகருக்கும் இடையே திருச்செந்தூர் – நெல்லை ரயில் பாதை அமைந்துள்ளது. இவ்வழியாக ரயில் செல்லும் போது இங்குள்ள ரயில்வே கேட்டை திறந்து மூடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரயில்வே கேட்டின் இருபுறங்கள், அன்பு நகர், ராம் நகர் என 4 புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. எனவே இப்பகுதியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ₹26.30 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்தன.

இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், தியாகராஜநகர் ரயில்வே மேம்பால திறப்பு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமை வகித்தனர். அப்துல்
வஹாப் எம்எல்ஏ, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்து பாலத்தில் பயணித்தனர்.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட திமுக செயலாளர்கள் (கிழக்கு) ஆவுடையப்பன், (மத்திய) மைதீன்கான், (மாநகர்) சுப்பிரமணியன், தேவாலய பணியாளர்கள் நலவாரிய தலைவர் விஜிலா சத்யானந்த், முன்னாள் எம்எல்ஏக்கள் மாலைராஜா, லட்சுமணன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் (திட்டங்கள்) ஜவஹர் முத்துராஜ், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் செல்வராஜ், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் (திட்டங்கள்) லிங்குசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வக்கீல் பிரபாகரன், பேச்சிப்பாண்டியன், சித்திக், பாளை ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான தங்கப்பாண்டியன்,

பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் நம்பி, மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், கிழக்கு மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாநகர அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், சிறுபான்மை ஆணைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தோணி செல்வராஜ், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி பிரபு, கதீஜா இக்லாம் பாசிலா, பகுதி செயலாளர்கள் அண்டன் செல்லத்துரை, துபாய் சாகுல், ஒன்றிய திமுக செயலாளர்கள் சுடலைக்கண்ணு, செல்வகருணாநிதி,

அருள்மணி, மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர்கள் சுரேஷ், கிரிஜாகுமார், நெல்லை மாநகர் மாவட்ட காங். தலைவர் சங்கரபாண்டியன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சீதாபாலன், கோகுலவாணி, சுப்புலட்சுமி, சின்னத்தாய், கந்தன், சகாய ஜூலியட் மேரி, முன்னாள் கவுன்சிலர்கள் பாலன் என்ற ராஜா, பேபி கோபால், ரேவதி அசோக், மாநகர பொருளாளர் அண்ணாத்துரை, மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் பலராமன், துணை அமைப்பாளர் வீரபாண்டியன், வக்கீல் தினேஷ், பொறியாளர் அணி அமைப்பாளர் அருணன், மின்வாரிய தொமுச கார்த்திக்குமார்,

இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான், கிழக்கு மாவட்ட விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் முத்தமிழ் ராஜாபாண்டியன், வடக்கு ஒன்றிய பொருளாளர் பேச்சிமுத்து, கவிஞர் மூர்த்தி, 36வது வட்ட செயலாளர் ஜெயின் உசேன், பஞ். தலைவர்கள் காளி, வேல்துரை, ஒன்றிய நிர்வாகிகள் செல்வசங்கர், செல்லத்துரை, சுரேஷ். இசக்கிபாண்டி, சப்பாணி பாண்டியன், மாரிச்சாமி, நெல்லையப்பன், மணி, சுப்பிரமணியன், இளைஞரணி மகாராஜன், மகேஷ், சிவந்தி சுபாஷ் தங்கபாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரயில்வேயால் 5 ஆண்டுகள் தாமதம்

தியாகராஜநகரில் மேம்பாலம் கட்டும் பணி 28.10.2016ல் துவங்கப்பட்டது. இரு புறங்களிலும் மேம்பாலம் கட்டுமானப் பணி முடிக்கப்பட்டு ரயில்வே தடத்திற்கு மேல் பகுதியை இணைக்கும் பணிகள் தவிர பிற பணிகள் அனைத்தும் 22.3.2019ல் முடிக்கப்பட்டது. இந்த பணிகள் ரயில்வே மூலம் மேற்கொள்ள 5 ஆண்டுகள் தாமதமானது. ரயில்வே பகுதி பணி ஒரு வழியாக கடந்த 10.8.2023ல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு தொடர் பணிகள் நெடுஞ்சாலைத் துறையால் முடிக்கப்பட்டு, தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

விரைவில் சுரங்கப் பாதை

தியாகராஜநகர் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ேகட்டை தாண்டி அன்புநகர், ராம்நகர் பகுதிகள் உள்ளன. இந்த பகுதிக்கு இலகு ரக வாகனங்கள் செல்ல வசதியாக ரயில்வே கேட்டில் சுரங்கப் பாதையும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ₹26.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தியாகராஜநகர் ரயில்வே மேம்பாலம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Thyagarajanagar Railway Flyover ,Minister ,Thangam Thannarasu ,Nellai ,Maharajanagar ,Thiagarajanagar ,Palai ,Tiruchendur ,Thyagarajanagar ,Farmers Market ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் வருங்கால...