×

செய்யது அம்மாள் கல்லூரி சார்பாக தெற்கு பெருவயலில் சிறப்பு முகாம்

ராமநாதபுரம், மார்ச் 16: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணி திட்டம் சார்பாக, சிறப்பு முகாம் தெற்கு பெருவயல் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் வள்ளி விநாயகம் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர் மருத்துவர் பாத்திமா சானாஸ் வாழ்த்துரை வழங்கினார்.

தேர்தலில் ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் பற்றி சிறப்பு விருந்தினர் வருவாய் கோட்டாட்சியர் ராஜமணகரன் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் வட்டாட்சியர் சாமிநாதன், உதவி வட்டாட்சியர் வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரியின் தாளாளர் செல்லதுரை அப்துல்லா மற்றும் ராஜாதி அப்துல்லா ஆகியோர் வாழ்த்தினர்.

இந்நிகழ்வினை தொடர்ந்து நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் விழிப்புணர்வு பற்றி தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் களப்பணிகள் நடைபெற்றது. இறுதியில் நாட்டு நல பணத்திட்ட அலுவலர் அருணா தேவி நன்றியுரையாற்றினார். இதற்கான ஏற்பாடுகளை நாட்டுநல பணித்திட்ட அலுவலர் சேக் அயாஸ் அஹமது, கல்லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது மற்றும் சபியுல்லா ஆகியோர் செய்திருந்தனர்.

The post செய்யது அம்மாள் கல்லூரி சார்பாக தெற்கு பெருவயலில் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : South Peruwayal ,Ammal College ,Ramanathapuram ,South Peruvyal ,National Welfare Project ,Sesuthu Ammal College of Arts and Science ,National Welfare Project Officer ,Valli Vinayagam ,Southern ,Peruwayal ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரம் ஆட்சியர் மீதான அவமதிப்பு வழக்கு முடித்துவைப்பு