×

சமூக வலைதளங்களில் குழந்தைகள் கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம்

 

பெரம்பலூர்,மார்ச் 16: குழந்தைகள் கடத்தப்படுவதாக பொய்யாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், என்று ‘கல்வியும் காவலும்’ என்ற விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி ‘கல்வியும் காவலும்’ என்ற மாணவர்களுக்கான விழிப்புணர்வு திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகள் பள்ளிகளின் அருகேயுள்ள காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளிடம், போதைப் பொருட்கள் உப யோகிப்பால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வுகள், போக்குவரத்து விதிகளை பின்பற்றுதல் ஏரி, குளம், ஆறு, போன்றவைகளில் குளிக்க செல்வ தால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் தற்கொலைகள் போன்றவை குறித்தும் சாதிய பாகுபாடுகளை ஒழித்தல் குறித்த விழிப்புணர் வும் ஏற்படுத்தப்பட்டது.

The post சமூக வலைதளங்களில் குழந்தைகள் கடத்தல் வதந்தியை நம்ப வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur district ,SP ,Shyamla Devi ,and Protection ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி