×

மெட்ரோ ரயில் பணி காரணமாக ஓ.எம்.ஆர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணி காரணமாக ஓ.எம்.ஆர் சாலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர்களால் முன்மொழியப்பட்ட பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள தரமணி மற்றும் துரைப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளதால் இப்பணிகளைக் கருத்தில் கொண்டு, பின்வரும் சாலைகளில் போக்குவரத்து மாற்றமானது இன்று முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் அப்போலோ சந்திப்பில் வலது புறம் திரும்பி, துரைப்பாக்கம் நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு பதிலாக, அவர்கள் நேராக சென்று துர்யா ஓட்டல் முன் யு-டர்ன் செய்து துரைப்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூருக்கு செல்லலாம். அடையாறு மற்றும் திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் அப்போலோ சந்திப்பில் வலதுபுறம் திரும்பி வேளச்சேரி நோக்கி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் மேலும் நேராக சென்று உலக வர்த்தக மையத்தின் முன் யு-டர்ன் செய்து அப்போலோ சந்திப்பில் இடது புறமாக திரும்பி வேளச்சேரியை அடையலாம். வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக ஓ.எம்.ஆர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்: போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : OMR ,CHENNAI ,Chennai Metro Rail ,OMR Road ,Mahabalipuram road ,Chennai Metro Rail Company ,
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டத்தில்...