×

உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி

 

திருவள்ளூர்: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையில் ஸ்டாலினின் குரல் என்கிற தலைப்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை வாக்காளர்கள் இடத்தில் விளக்கிடும் வகையில் திருவள்ளூர் நகரம், 6வது வார்டில் உள்ள முகமது அலி தெரு மற்றும் விநாயகர் தெருவில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திமுக நகர அவை தலைவர் தி.ஆ.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.

மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் ப.கோபால், நகர்மன்ற உறுப்பினர்கள் கு.பிரபாகரன், த.அயூப்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீனவர் அணி தலைவர் ரா.குணசேகரன், துணை அமைப்பாளர்கள் மஞ்சுளா குமார், ப.கருணாகரன், பிரவின்ராஜ், ஜி.பாலசுப்பிரமணி, இளைஞரணி செயலாளர் தா.சீனிவாசன், ஜெ.ஜோஸ்வா, மீன் பழனி, என்.நந்தகோபால் உள்பட்ட ஏராளமான பெண் வாக்காளர்கள் கலந்து கொண்டனர்.

The post உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Stalin ,Tiruvallur ,Dravida ,government ,Mohammad Ali Street ,Vinayagar Street ,6th Ward ,
× RELATED திருத்தணி அருகே மின்கம்பியில் சிக்கி முன்னாள் கோயில் பணியாளர் பலி!!