×

கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் திறந்தவெளி பூங்கா

அம்பத்தூர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 8.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய திறந்தவெளி பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டு, புதிய பூங்கா அமைக்கும் பணியை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து, பூ மார்க்கெட் வளாகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருந்த செயற்கை நீருற்றை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post கோயம்பேடு பூ மார்க்கெட் வளாகத்தில் ரூ.15 கோடி மதிப்பில் திறந்தவெளி பூங்கா appeared first on Dinakaran.

Tags : Crore Open Air Park ,Koyambedu Flower Market Complex ,Koyambedu Flower Market ,Chennai Metropolitan Development Corporation ,Koyambedu ,market ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள்...