×

பங்கு மூலதனம் ரூ.130 கோடி ஆனா, தேர்தல் நிதி ரூ.410 கோடி: அம்பானி நிறுவனம் தில்லாலங்கடி

குயிக் சப்ளை செயின் பிரைவேட் லிமிடெட் கம்பெனி மொத்தம் ரூ.410 கோடிக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. நவிமும்பையில், திருபாய் அம்பானி நகரில் இதன் பதிவு அலுவலகம் உள்ளது. இங்குதான் பெரும்பாலான அம்பானி குழும நிறுவனங்களின் பதிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தில் இயக்குனர்களாக உள்ள தபஸ் மித்ரா, விபுல் பிரான்லால் மேத்தா ஆகியோர் அம்பானி குழும நிறுவனங்கள் பலவற்றிலும் இயக்குநர்களாக இருக்கிறார்கள். இந்த நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனம் ரூ.130 கோடிதான். ஆனால், அதைவிட பல மடங்கு அதிகமாக தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜவுக்கு தந்துள்ளது.

இந்த நிறுவனம் கடந்த 2021-22ல் மொத்தம் ரூ.360 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளது. அந்த ஆண்டு அந்த நிறுவனத்தின் நிகர லாபம் வெறும் ரூ. 21.72 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. வெறும் ரூ.21 கோடி லாபம் சம்பாதித்த நிறுவனம் எதற்காக ரூ.360 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கியது. அது யாருடைய பணம். இந்த நிறுவனம் அரசிடம் இருந்து கான்டிராக்ட் எதையும் பெறவில்லை. அதேநேரத்தில் ரெய்டு எதுவும் இந்த நிறுவனத்தில் நடத்தப்படவில்லை. அப்படியிருக்கும்போது, இது அம்பானி சார்பில் பாஜவுக்கு கொடுக்கப்பட்ட தேர்தல் நிதி என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

* தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க வேதாந்தா லஞ்சம்
தூத்துக்குடியில் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி வந்த ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்துள்ளது. இந்த ஆலையை மீண்டும் திறக்க பல வழிகளில் ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தி வரும் வேதாந்தா குழுமம் முயற்சி செய்து வருகிறது. ஆனால், இன்று வரை அதை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தடுத்து வருகிறது. அண்மையில் கூட தமிழ்நாடு அரசின் சிறப்பான வாதங்கள் காரணமாக உச்ச நீதிமன்றமே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி மறுத்தது. இந்த வேதாந்தா நிறுவனம் ரூ.376 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது தெரியவந்துள்ளது.

இதன் முதல் தவணை ஏப்ரல் 2019ல் வாங்கப்பட்டது. ஆனால் 2018ம் ஆண்டின் நடுப்பகுதியில், விசா லஞ்ச வழக்கில் வேதாந்தா குழுமத்திற்கு தொடர்புள்ள இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சில சீன பிரஜைகளுக்கு விதிகளை மீறி விசா வழங்கப்பட்டது தெரியவந்தது. கடந்த 2022ல் அமலாக்கத்துறை சிபிஐக்கு அனுப்பிய குறிப்பின் அடிப்படையில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2019 ஏப்ரல் 16 அன்று, வேதாந்தா லிமிடெட் நிறுவனம் ரூ.39 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. அடுத்த நான்கு ஆண்டுகளில், அதாவது 2023 நவம்பர் வரை, ரூ.337 கோடிக்கு மேல் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியது. எனவே வேதாந்தா வாங்கிய மொத்த பத்திரங்களின் மதிப்பு ரூ. 376 கோடிக்கு அதிகமாக உள்ளது. தூத்துக்குடியில் மூடப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் நிறுவனத்தின் ஆலையை திறக்க அனுமதி பெறும் நோக்கிலும் இந்த தேர்தல் பத்திரங்கள் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது.

The post பங்கு மூலதனம் ரூ.130 கோடி ஆனா, தேர்தல் நிதி ரூ.410 கோடி: அம்பானி நிறுவனம் தில்லாலங்கடி appeared first on Dinakaran.

Tags : Ambani Institute Dillalangadi Quick Supply Chain Private Limited Company ,Navi Mumbai, Tirubai Ambani ,Ambani Group ,Ambani Company ,Dillalangadi ,Dinakaran ,
× RELATED குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்